Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா விரைவில் குணமடைய கர்நாடக முதல்வர் வேண்டுதல்!

ஜெயலலிதா விரைவில் குணமடைய கர்நாடக முதல்வர் வேண்டுதல்!

ஜெயலலிதா விரைவில் குணமடைய கர்நாடக முதல்வர் வேண்டுதல்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (13:29 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிராத்தனை செய்வதாக கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவுக்கு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு இடையே காவிரி பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இந்த டுவிட்டர் பதிவு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அவர் விரைவில் குணைமடைய வேண்டுகிறேன் என சித்தராமையா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் மரணம்; சிபிஐ விசாரணை கேட்டு நாளை ஆர்ப்பாட்டம் : திருநாவுக்கரசு அறிவிப்பு