Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல்.. பதவி விலகுகிறாரா?

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இது குறித்து ஆலோசனை செய்ய அவசர கூட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளதாகவும் வரும் 22ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை செய்யப்பட இருப்பதாகவும் ஆலோசனைக்கு பின்னர் தான் முதல்வர் சித்தராமையா  பதவி விலகுவாரா என்பது குறித்து தெரியவரும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments