Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காண்டம் வாங்கியதில் ஊழல்: காவிரியை கையிலெடுத்த சித்தராமையா!

காண்டம் வாங்கியதில் ஊழல்: காவிரியை கையிலெடுத்த சித்தராமையா!

காண்டம் வாங்கியதில் ஊழல்: காவிரியை கையிலெடுத்த சித்தராமையா!
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:10 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காண்டம் வாங்கியதில் நடந்த ஊழலை மறைக்க தான் காவிரி விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


 
 
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காண்டம் வழங்குவதற்கான நிதியில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் முதல்வர் சித்தராமையா, சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பங்கு இருக்கிறது எனவும் செய்தியளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த ரமேஷ் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில எயிட்ஸ் கட்டுப்பாடு கழகத்தின் தலைவராக செயல்படுபவர் மாநில முதல்வர் சித்தராமையா. இதற்கு மத்திய அரசு, யூனிசெஃப் மற்றும் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகிறது.
 
இந்த நிதியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்துள்ளனர். காண்டம் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அரசு நிறுவனத்தில் இருந்து காண்டம் வாங்காமல் தனியாரிடம் இருந்து வாங்கியுள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
 
மேலும், இந்த ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது மாநில ஊழல் தடுப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம் ஊழலை மறைப்பதற்காக தான் கர்நாடக அரசு காவிரி விவகாரத்தை கையில் வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேட்டா இல்லாமலேயே வீடியோ டவுன்லோட்/ஷேரிங்: யூட்யூப் கோ ஆப்