தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் கேரளாவில் தினமும் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் அண்டை மாநிலங்கள் விழிப்புணர்வுடன் உள்ளன. அந்த வகையில் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு நுழையும் எல்லைகளை கர்நாடக மாநில மாநிலம் மூடி விட்டதாக தெரிகிறது இந்த திடீர் முடிவு காரணமாக கேரளாவில் இருந்து கர்நாடகத்துக்கு செல்பவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது
கேரளாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மத்திய அரசின் வழி முறைகளை மீறுவது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய மாநில மக்களை காப்பது கர்நாடக அரசின் கடமை என்பதால் இந்த முடிவுக்கு கர்நாடக மாநில மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்