இதை கூட செய்ய முடியவில்லையா இந்த முதல்வருக்கு?

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (10:33 IST)
கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, தன்னுடைய அமைச்சரவையை கூட விரிவாக்கம் செய்ய முடியவில்லை என அரசியல் விமர்சகர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

கர்நாடக அமைச்சரவையில் இன்னும் ஆறு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த ஆறு துறைகளுக்கு அமைச்சர் நியமன நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக முதல்வர் குமாரசாமி ஈடுபட்டு வந்தாலும் அவரால் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. சுமார் 25 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வேண்டும் என முட்டி மோதி வருவதால் யாரை அமைச்சராக்குவது யாரை சமாதானம் செய்வது என்று முதல்வர் குமாரசாமியால் முடியவில்லை.

இதனால் அமைச்சர் விரிவாக்கம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி காரணமாக பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதால் முதல்வர் குமாரசாமி அச்சம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை முடிந்தவரை காப்பாற்றி கொள்ள அமைச்சரவை விரிவாக்கத்தை அவர் ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

போகிற போக்கை பார்க்கும்போது பாராளுமன்ற தேர்தல் வரை கூட இந்த ஆட்சி தாக்குப்பிடிக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments