சின்னத்திரை பிரபலம் கோர விபத்தில் பலி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புதன், 27 மே 2020 (14:50 IST)
சின்னத்திரை டிவி ஷோ பிரபல மாடல் காரில் சென்றபோது ஏற்பட்ட கோர விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல், பிரபல கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றவர். தற்போது மாடலாக இருந்து வரும் இவர் தனது சொந்த ஊரான கூர்க் அருகேயுள்ள மடிக்கேரி பகுதிக்கு தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த டிராக்டரின் மீது கார் கட்டுபாட்டையிழந்து மோதியதில் மெபினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தோழிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மெபினாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா?