கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (11:26 IST)
பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
நடிகர் தர்ஷன், தனது ரசிகரை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் தர்ஷன், பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் கோரி தர்ஷன் தரப்பில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நேற்று விசாரணை நடைபெற்றது. 
 
விசாரணையின் முடிவில் நீதிபதி, தர்ஷனுக்கு ஆறு வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பெங்களூரில் சிறந்த மருத்துவர் இருக்கும்போது மைசூரில் சிகிச்சை எதற்காக தேவை என்பதையும் சுட்டிக்காட்டி, ஒரு வாரத்திற்குள் தர்ஷனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments