Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி.! விசாரிக்க 3 தனிப்படைகள் அமைப்பு.!!

Actor Dharsan

Senthil Velan

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:18 IST)
கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளன‌ர்.
 
இந்நிலையில் தர்ஷன் சிறையில் நாற்காலியில் அமர்ந்து சொகுசாக நண்பர்களுடன் பேசியவாறு தேநீர் குடித்துக்கொண்டே,சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அவருடன் குற்றவாளிகளான ரவுடி வில்சன் கார்டன் நாகா, குள்ளா சீனா ஆகியோரும், தர்ஷனின் மேலாளர் சீனிவாஸும் உள்ளனர். இந்த படம் வெளியான சில மணி நேரத்தில் தர்ஷன் தனது நண்பருடன் வீடியோ காலில் பேசும் வீடியோவும் வெளியானது.

சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தர்ஷன் சொகுசான அறையில் இருந்து சிரித்தவாறு பேசுகிறார். இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகார் ஜூன் சுவாமி உட்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 
மேலும் இது தொடர்பாக நேற்று 3 எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொன்றையும் விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலி வீட்டுக்கு மது போதையில் சென்ற காதலன் -ரகளையில் ஈடுபட்டு கிணற்றில் குதித்ததால் பரபரப்பு.