கங்கனா ரனாவத் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (08:53 IST)
நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ள படத்தை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் கங்க்னா ரனாவத். இதையடுத்து அவர் தற்போது பல மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கங்கனா ‘நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எமெர்ஜென்ஸி என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தை கங்கனாவே இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மணிகர்ணிகா படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments