தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினியை அடுத்து கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பல தேசிய தலைவர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தவிழாவில் கலந்துகொள்ள நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கமலும் ரஜுனியும் பாஜகவின் பி டீம் என அழைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த அழைப்பு அந்த சந்தேகங்களுக்கு தூபம் போடுவது போல உள்ளது. ஆனால் ரஜினியும் , கமலும் இதுவரை விழாவிற்கு செல்வது குறித்து பதில் எதுவும் சொல்லவில்லை.