Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவை விரட்டிய இந்து முஸ்லீம் சகோதரர்கள்!

பாஜகவை விரட்டிய இந்து முஸ்லீம் சகோதரர்கள்!
, வியாழன், 16 ஜூன் 2016 (11:50 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவை அங்குள்ள இந்து, முஸ்லீம் மக்கள் சேர்ந்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா நகரில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், 346  குடும்பங்கள்  அங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டதாகவும் பாஜக எம்.பி ஹுக்கும் சிங் என்பவர்  பட்டியல் வெளியிட்டிருந்தார்.
 
ஆனால் அந்த பட்டியலில் உள்ள பல இந்து குடும்பங்கள் அந்த ஊரிலியே வழ்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவர பாஜக எம்.பி ஆதராமின்றி பொய் கூறுவதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டின.
 
இதனையடுத்து பாஜக சார்பில் 9 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த உண்மை கண்டறியும் குழு நேற்று அந்த கிராமத்திற்கு சென்று விசாரிக்க சென்றனர். இந்த குழுவுக்கு உள்ளுர் இந்து, முஸ்லீம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்து மதத் தலைவர்கள், இஸ்லாமிய தலைவர்கள் பேரணியாக சென்று பாஜகவின் உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
சில இந்துக்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் தங்கள் சொந்த பிரச்னைகள் காரணமாக வெளியூர் சென்றுள்ளார்கள் நாங்கள் அனைவரும் இங்கே பல ஆண்டுகளாக சகோதரர்களாக வாழ்ந்து வருவதாக கூறிய அவர்கள், பாஜக வேண்டுமென்றே இதனை மதப்பிரச்சனையாக மாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்டேவை "பஞ்சராக்கிய" நீதிபதி