Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகள் மூலம் இந்தியாவில் நுழைய ஜான்சன் அண்டு ஜான்சன் கடும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:22 IST)
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. 

 
இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் 12.38 கோடி வேக்ஸின் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளை இந்தியாவிலும் பயன்படுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கோரி வருகிறது. 
 
இதனிடையே தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!

ஈமு கோழி வழக்கு.. 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு..!

ஆட்டோ கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

யூட்யூப் பிரபலம்னா என்ன வேணாலும் செய்யலாமா? சிறுவர்களை துன்புறுத்தி வீடியோ எடுத்த திவ்யா கள்ளச்சி! - அதிரடி கைது!

டிக் டாக் வீடியோவை நிறுத்தவில்லை.. 15 வயது சிறுமி கெளரவ கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments