Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

JNU போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோன் !

Advertiesment
JNU போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோன் !
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (21:17 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தில் நேற்று முன் தினம் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுக்கூட்டத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சராமாரியாக தாக்கியது. இதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை தமிழர்கள் குறித்து ராதாரவி கூறிய சர்ச்சை கருத்து?