ஜார்கண்ட் தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (08:33 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக 81 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்பட 3 கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டது. பாஜக தனித்து போட்டியிட்டது 
 
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட முடிவிலேயே காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் சற்று முன்னர் காங்கிரஸ் கூட்டணி 22 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. மேலும் இதர கட்சிகள் 12 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன
 
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலையில் காங்கிரஸ் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே 22 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் காங்கிரஸ் மிக எளிதில் ஆட்சியைப் பிடித்து விடும் என்றே கணிக்கப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த பாஜக தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை இழந்தால் அக்கட்சிக்கும் அமித்ஷாவுக்கும் பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments