Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு காதலனுடன் சென்ற மனைவி – தற்கொலை செய்துகொண்ட முதியவர் !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (08:09 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் கணவரை பிடிக்கவில்லை என வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ் அனுப்பிவிட்டு பெண் ஒருவர் மாயமாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவியின் பெயர் ராஜஸ்ரீ. இவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. ராஜஸ்ரீ தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வேல்முருகன் வீட்டில் தனது மனைவி இல்லாமல் இருப்பதை அடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். வாட்ஸ் ஆப்பில் வ்ந்த ஆடியோவில் அவரது மனைவி ராஜஸ்ரீ தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும் சொல்லியிருந்தார்.

இந்த ஆடியோவை அடிப்படையாகக்கொண்டு வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ராஜஸ்ரீ சந்தோஷுடன் தான் சென்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த சந்தோஷின் தந்தை அவமானத்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments