ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை காவலர்கள் கயிறு கட்டி இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. அவர் தப்பித்து ஓடிவிடக்கூடாது என்பதற்காகவே கயிறு கட்டி அழைத்து சென்றதாக காவல் துறை கூறியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ராஜஸ்தானில் உள்ள தனது கணவர், மாமியார், மாமனார், கணவரின் சகோதரி ஆகியோர் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஜார்கண்ட் மாநில காவல் துறையிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்த ராஜஸ்தான் சென்றனர் ஜார்கண்ட் காவலர்கள். காவலர்கள் அங்கு சென்று போது புகார் செய்த பெண்ணின், கணவரின் தங்கை மட்டுமே இருந்தார், மற்ற அனைவரும் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.
காவலர்கள் அங்கு சென்றதும் வீட்டில் இருந்த அந்த இளம் பெண் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அவரை கயிறு கட்டி அழைத்து வந்ததாக காவல் துறை கூறியுள்ளது. காவலர்கள் இளம் பெண்ணை கயிறு கட்டி இழுத்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அதன் மூலமே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வாந்தது.