Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளர் 2 பேர் கைது

Advertiesment
கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளர் 2 பேர் கைது
, வெள்ளி, 17 ஜூலை 2020 (18:30 IST)
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் விவகாரம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த தங்க கடத்தலில்  ஈடுபட்டிருந்த ஸ்வப்னா சமீபத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார் என்பதும், இதனையடுத்து தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்ததே
 
இந்த தங்க கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு தொடர்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அவரது அரசின்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
 
இந்த நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவிடமிருந்து நகைக் கடையினர் கடத்தல் தங்கம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கேரள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன சந்தையில் அறிமுகமான iQOO U1: ஸ்மார்ட்போன் எப்படி?