Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.746 கோடி சொத்துக்கள் விடுவிப்பு!

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.746 கோடி சொத்துக்கள் விடுவிப்பு!
, புதன், 31 ஜூலை 2019 (14:38 IST)
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி... இப்போது சினிமா நடிகர்களை விட ஆந்திர மாநில மக்கள் உச்சரிக்கும் பெயராகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட அரசியல் முயற்சி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் பொறுபேற்றுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி பாரதி ரெட்டிக்கு சொந்தமான கம்பெனிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  
 
அம்மாநில அதிகாரிகளின் துணையோடு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பாரதி சிமெண்ட் நிறுவனத்துக்கு அப்போதைய அரசு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீட்டில் மூலமாக சுமார் ரூ.152 கோடி சுண்ணாம்புக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டது.இதை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
 
இதனையடுத்து, ரூ. 404. 7 கோடி அசையும் அசையா சொத்துககள் , ரூ. 344. 3 கோடி அசையா சொத்துக்கள் என ரூ.749.10 கோடி அளவுக்கு பரிவர்த்தனை மூலம்  மோசடி செய்துள்ளதாக அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இதுசம்பந்தமாக பணப்பரிவர்த்தனை தீர்ப்பாயம் கூறியுள்ளதாவது : ஜெகன்மோகன் ரெட்டி பணப்பரிவர்த்தனை குறித்த அமலாக்கத்துறை விசாரணையில் பலவேறு ஓட்டைகள் இருக்கிறது. அமலாக்கத்துறையின் அடிப்படையில் பார்க்கும் போது,சட்டப்படிதான் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஜெகன் மோகன் ரெட்டியின் முடக்கப்பட்ட ரூ. 740 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய நபர்களுக்கு சம்மன் – சிபிசிஐடி முதல் நடவடிக்கை !