Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு !

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:13 IST)
மஹாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றிய ஊழியருக்கு ஒரு பைக் நிறுவனம் விலையுயர்ந்த பைக்கை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில்வே நிலையத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தபோது குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. உடனே என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண் திகைத்து நின்ற நிலையில் தண்டவாளத்தில் ரயிலும் கிட்ட நெருங்கிவிட்டது.

இந்நிலையில் தண்டவாளத்தில் வேகமாக ஓடிவந்த ரயில்நிலைய பணியாளர் மயுர் ஷெல்கே மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையை மேலே தூக்கி விட்டதுடன், ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை மத்திய ரயில்வே ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்  இந்த உணர்ச்சிப் பூர்வமான வீடியோ காட்சியை இணையதளத்தில் பார்த்த ஜாவ பைக் நிறுவனத்தின் இயக்குநர் தாரிஜா, ஒரு புதிய ஜாவா பைக்கை ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments