11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

Mahendran
வெள்ளி, 31 அக்டோபர் 2025 (12:14 IST)
ஆந்திரப் பிரதேசத்தின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஜன சேனா கட்சி உறுப்பினர் ராயபுரெட்டி சத்யா வெங்கட கிருஷ்ணா என்கிற பாபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாபி பாலியல் ரீதியாத் துன்புறுத்தி, வன்கொடுமை செய்ய முயன்றதாக சிறுமியின் தாய் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஐ போலாவரம் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனச் சிறுமியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.
 
இதேபோல, சில நாட்களுக்கு முன், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தாடிக் நாராயண ராவ், 13 வயதுச் சிறுமியை பாலியல் ரீதியாக தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் வழியில் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
 
அடுத்தடுத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்