Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபையில் நிர்வாணமாக பேசிய சமூக தலைவர்

சட்டசபையில் நிர்வாணமாக பேசிய சமூக தலைவர்

Advertiesment
சட்டசபையில் நிர்வாணமாக பேசிய சமூக தலைவர்
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (17:00 IST)
ஹரியானா சட்டசபையில் ஜெயின் சமூக தலைவர் முக்கால் நிர்வாணமாக உரையாற்றிய சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் நிர்வாணமாக உரையாற்றிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


 
 
நேற்று நடந்த ஹரியானா சட்டசபை கூட்டத்திற்கு டருண் சாஹர் என்ற ஜெயின் சமூக தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் டருண் சாஹர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகள் குறித்தும் 40 ந்3இமிடம் பேசினார்.
 
ஆனால் அவர் முக்கால் நிர்வாணமாக நின்று சட்டசபையில் உரையாற்றியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அவர் அவரது சமூக வழக்கப்படி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் உரையாற்றினார்.
 
அவர் உறையாற்றிய அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரின் இந்த சட்ட்டசபை நிர்வாண உரை ஏற்றுக்கொள்ள கூடியதா என்பதை விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் செய்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை வாலிபர்