Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் - திருப்பி அனுப்பிய சிறை அதிகாரிகள்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (17:39 IST)
பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்ற, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.  
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, கடந்த 2 நாட்களாக அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அவரையும், டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
 
இந்நிலையில், இன்று சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் பெங்களூருக்கு சென்றார். இன்று மாலை 3.30 மணியிலிருந்து  காத்திருந்த அவருக்கு, சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகிறது. எனவே, தற்போது அவர் சென்னை திரும்புகிறார்.
 
சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவை பலர் சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், சிறை அதிகாரிகள் இன்று தினகரனை திருப்பி அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments