பாஜக கைப்பற்றிய நகராட்சியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்: கேரளாவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:11 IST)
பாஜக கைப்பற்றிய நகராட்சியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்
கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இதில் பெரும்பாலான தொகுதிகளை ஆளும் இடதுசாரி முன்னணி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே. காங்கிரஸ் கட்சி ஓரளவு வெற்றி பெற்றாலும் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் ஒருசில நகராட்சியையும் ஒரே ஒரு மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றியதாக தெரிகிறது இந்த நிலையில் கேரளாவில் பாலக்காடு என்ற நகராட்சியை பாஜக கைப்பற்றியது. இதனையடுத்து அந்த நகராட்சி அலுவலகத்தில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பேனரை பாஜகவினர் வைத்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
பாலக்காடு நகராட்சி அலுவலகத்தின் வெளியே ஜெய் ஸ்ரீ ராம் என்ற பேனர் தொங்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தொண்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ள சிபிஎம் கட்சி தொண்டர்கள் உடனடியாக வந்து ஜெய்ஸ்ரீராம் பேனரை அகற்றி விட்டு அதற்கு பதிலாக தேசியக்கொடியை வைத்தனர். இந்த சம்பவம் பாலக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments