Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாம் விருதை “அப்பா” விருதாக மாற்றிய முதல்வர்??

Arun Prasath
புதன், 6 நவம்பர் 2019 (12:48 IST)
அப்துல் கலாமின் பெயரில் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுவந்த விருதுக்கு தனது அப்பா பெயரை மாற்றிய நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில், ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் தேதி, தேசிய கல்வி தினம் கடைப்பிடிக்கும் வகையில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் 10 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பிரதீபா வித்யா புராஸ்கர் விருது வழங்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விருதின் பெயரை மாற்றி, தனது தந்தையும் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டினார்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி அப்துல் கலாமை அவமதித்து விட்டார் என எதிர்கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தனது அறிவிப்பை ஜெகன் மோகன் ரெட்டி திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின்  இந்த பெயர் மாற்றத்தை எதிர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் ”YSRCPInsultsAbdulKalam” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments