செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு.. பெங்களூருவில் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

Siva
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (09:13 IST)
பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா பகுதியில், செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில், மஞ்சு பிரகாஷ் என்ற ஐ.டி. ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று மஞ்சு பிரகாஷ் கரும்புச்சாறு குடித்துவிட்டு தனது செருப்புகளை அணிந்துகொண்டு வீட்டிற்கு திரும்பினார். அவர் தனது செருப்புகளை வாசலில் கழற்றி வைத்துவிட்டு, அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார்.
 
சற்று நேரத்திற்கு பிறகு, அவரது குடும்பத்தினர் செருப்புக்கு அருகில் ஒரு பாம்பு இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக அறைக்குள் சென்று பார்த்தபோது, மஞ்சு பிரகாஷ் வாயில் நுரை தள்ளியபடியும், காலில் ரத்தம் வடிந்த நிலையிலும் படுக்கையில் கிடந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 
மஞ்சு பிரகாஷ் 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பேருந்து விபத்தில் சிக்கி, காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் காரணமாக, அவருக்கு அந்த காலில் உணர்ச்சி குறைவாக இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, பாம்பு கடித்த வலியை அவர் உணர்ந்திருக்க மாட்டார் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments