ஐதராபாத்தில் ஐ.டி ஊழியர் ஒருவர் பொம்மை துப்பாக்கியை காட்டி திருட முற்படும் போது பொதுமக்கள் அவரை தாக்கி போலீஸில் பிடித்து கொடுத்துள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்தவன் டேவிட் பிரவீன். இவன் அங்குள்ள விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்து வந்துள்ளான். சமீபத்தில் இவனை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். வேலை தேடி அலைந்த இவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளான்.
இந்நிலையில் வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்த அவன், பொம்மை துப்பாக்கியோடு ஒரு ஃபர்தாவை அணிந்து கொண்டு வங்கிக்குள் நுழைந்தான். அங்கிருந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி, காசாளரிடம் இருந்து 3 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முற்பட்டான்.
அப்போது பொதுமக்கள் அவனை கல்லால் தாக்கி, பின்னர் அவனை போலீஸில் ஒப்படைத்தனர். குடும்ப கஷ்டத்தால் திருடிவிட்டதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.