Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!

ISRO
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் வெற்றிகரமாக நிலவை அடைந்து தற்போது அது நிலவை ஆய்வு செய்து வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாகிய ஆதித்யா எல் 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆதித்யா எல் 1 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்..
 
 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும்  ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அதனுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!