விண்ணில் ஏவ தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (08:28 IST)
ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் தயார் நிலையில் இருப்பதாகவும், வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-15  என்ற ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 29ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் காலை 6:23 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தும் என்றும், இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்டவுன், நாளை காலை 5:23 மணிக்கு தொடங்குகிறது என்றும், தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments