Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதியா? பெரும் பரபரப்பு

Advertiesment
, வெள்ளி, 17 மார்ச் 2017 (23:09 IST)
உலக அதிசயங்களுள் ஒன்றானதாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதியுமான ஆக்ராவில் உள்ள  தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உளவுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவதுள்ளது.



 


சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்து மத ஆதரவு கட்சியான பாஜக வெற்றி பெற்றுள்ளதால் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாஜ்மஹாலை தகர்க்க சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தாஜ்மஹாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹாலின் முக்கியமான இடங்களில் SWAT எனப்படும் கமாண்டாக்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ள தாஜ்மஹால் 17-ம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்டது., இது உலக அதிசயமாக மட்டுமின்றி உலக அளவில் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இந்த தாஜ்மஹாலுக்கு வருகை தருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டு வேலை செய்தால் சம்பளமாக செக்ஸ். ரஷ்யாவில் புது நடைமுறை