Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்தியானந்தா பதுங்கியிருக்கும் ரகசியம் இடம் இதுதானா ? டிராக் செய்த உளவுத்துறை !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (17:19 IST)
நித்யானந்தா, இமயமலைச் சாரலில்  பதுங்கி இருப்பதை, உளவுத்துறை அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர் ஜனார்தா சர்மா, தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, ,நித்யானந்தா மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஒடியதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், நித்தியானந்தா, தற்போது, இமயமலைச் சாரலில்  பதுங்கியுள்ளதாக  தகவல் வெளியாகிறது. அதனால், உளவுத்துறை அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments