Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'புதிய கட்சி' - லட்சியத்தோடு தொடங்கிய இரும்பு பெண்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (18:47 IST)
மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் இரோம் சர்மிளா. இவர், மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.


 


 

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இவர் கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.

மேலும், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். பின்னர் இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் விடுதலையான இரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக இம்பால் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.  இதுகுறித்து இரோம் ஷர்மிளா கூறியதாவது, ”அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவே புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளேன்." என்றார்.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments