Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை தாக்கியவர்கள் மீது ஏன் புகார் அளிக்கவில்லை? : சிவகார்த்திகேயன் பதில்

தன்னை தாக்கியவர்கள் மீது ஏன் புகார் அளிக்கவில்லை? : சிவகார்த்திகேயன் பதில்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (18:43 IST)
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த போது, நடிகர் சிவகார்த்திகேயனை  சிலர் பின்புறமாக தாக்கினர். ஆனால் அது பற்றி மீடியாக்களிடம் அவர் வாய் திறக்கவில்லை. போலீசாரிடமும் புகார் அளிக்கவில்லை.


 

 
அவரை தாக்கியது நடிகர் கமல்ஹாசனுடைய ரசிகர்கள்தான் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் நடிகர் கமல் அதை மறுத்திருந்தார். 
 
இந்நிலையில், ரெமோ படம் தொடர்பான ஒரு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் ‘தன்னை வேலை செய்ய விடுங்கள்’ என்று கூறி அழுதார். இந்த விவாகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.  
 
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, மதுரை விமான நிலையத்தில், அவரை தாக்கிய சிலர் மீது ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த அவர் “அவர்கள் மீது நான் புகார் அளித்திருந்தால், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். இதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்கும். அதனால் அதை நான் செய்ய விருப்பம் இல்லை” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments