Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைகள்! – இன்று முதல் தொடக்கம்!

Advertiesment
2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைகள்! – இன்று முதல் தொடக்கம்!
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (08:53 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் தொடங்கப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் உள்ளிட்ட சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. பின்னாளில் கொரோனா குறைந்த நிலையிலும் சர்வதேச விமான சேவைகளுக்கு முழு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதனால் இன்று முதல் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 நிமிட டெலிவரி குறித்து ஜொமைட்டா நிறுவனம் விளக்கம்!