Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடது காலில் காயம் , வலது காலில் ஆபரேசன் -மருத்துவர்கள் செய்த விபரீதம்

இடது காலில் காயம் , வலது காலில் ஆபரேசன் -மருத்துவர்கள் செய்த விபரீதம்
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (14:09 IST)
சில மாதங்களூக்கு முன்பு தமிழகத்தில், சாத்தூரில் ஒரு கர்பிணிப் பெண்ணுக்கு எஸ்ட்ஸ் பாதித்த ரமேஷ் எனபவரின் ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதேபோல் சென்ற வாரம்  ஹைதராபாத்தில் பெண் ஒருவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும் போது தவறுதலாக கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்ததாகவும், மூன்று மாதங்கள் கழித்து அதை மருத்துவர்கள் அகற்றிதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மேற்கூறியது போன்று ஒடிஷாவில் ஒரு பெண்ணுக்கு இடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் அப்பெண்ணின் வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்துள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒடிஷாவில் வசிக்கும் மிதாராணி ஜேனா என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அனந்த பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மருந்து போட்டு கட்ட செவிலியர்களிடம்  கூறியுள்ளனர்.
 
ஆனால் மயக்கமாக பெண் கண் விழித்துப் பார்க்கையில் காயமான இடது காலுக்குப் பதிலாக வலது காலில் சிகிச்சை அளித்து கட்டுப்போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிகிச்சையில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நிர்வாகிகளிடன் புகார் அளித்துள்ளார்.
 
தற்போது இந்த பெண்ணால் நடக்க முடியாது என்றும் சில நாட்களுக்கு பிறகுதான் இவரால் நடக்க முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம்! ஆஹா கல்யாணம்.. இது நம்ம ரஜினி வீட்டு கல்யாணம்... புகைப்படங்கள்