கொரோனா வைரஸை 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, உலகம் முழுவதும் குரங்கு வைரஸ் தொற்றுப்ப்பரவி வருகிறது.
பிரிட்டனில் சுமார் 71 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம்179 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 555 பேர் குரங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரிட்டர் சுகாதாரத்துறை குரங்கு அம்மை வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில்,குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி தென்பட்டவர்களும் உடலுறவு கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தொற்றுப் பாதித்து, புண்கள் உள்ளவர்கள் பொதுவெளியில் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.