Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஸ்கட் - டெல்லி இண்டிகோ விமானம் நாக்பூரில் திடீரென தரையிறக்கம்.. பயணிகள் அச்சம்..

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (14:51 IST)
மஸ்கட்டிலிருந்து கொச்சி வழியாக டெல்லி சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம்  வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என நாக்பூர் துணை ஆணையர் லோஹித் மதானி தெரிவித்துள்ளார்.
 
கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அதன் பிறகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கட்டில் இருந்து கொச்சி வந்து, பின்னர் 157 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் டெல்லிக்குப் புறப்பட்ட விமானத்திலேயே இந்த மிரட்டல் வந்துள்ளது.
 
தற்போது பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும், விமானம் டெல்லிக்குச் செல்லும்" என்று சிஐஏஎல் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments