Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்.. விரைவில் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (17:54 IST)
இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை விரைவில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன் முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆறுகளின் மேலே மேம்பாலம் அமைத்து தான் பாதை அமைப்பார்கள்.

ஆனால் ஹூக்ளி ஆற்றுக்கு கீழே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 520 மீட்டர் தூரத்துக்கு சுரங்கு பாதை அமைக்கும் பணி நடந்தது.

ஆற்றுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால், விரைவில் இந்த பாதையில் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments