LinkedIn நிறுவனம் அணமையில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியர்கள் அதிக அளவில் இந்த நிறுவனங்களில்தான் பணிபுரிய விருப்பத்துடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அண்மையில் LinkedIn நிறுவனம் இந்தியர்கள் எந்த நிறுவனங்களில் அதிக அளவில் பணிபுரிய விருப்பப்படுகின்றனர் என்ற ஆய்வை நடத்தியது. இதில் குறிப்பாக இந்தியாவில் முன்னணியில் உள்ல ஐடி நிறுவனங்களைப் பட்டியலிட்டு, அதில் அவர்களது விருப்பம் குறித்து ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிவில் இந்தியர்களின் விருப்பத்தில் இடம்பெற்ற நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து அமேசான், கேப்ஜெமினி, கூகுள், அடோப், ஹெச்.சி.எல்., ஸ்னாப்டீல், மைக்ரோசாப்ட், ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.