Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (12:15 IST)
இந்திய போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவை தாக்க வரும் ஏவுகணைகளை  முறியடிக்கும் பயிற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், கடற்படை வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும் போர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகை இன்று நடைபெற்றதாகவும், இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும் இந்தியா கடற்ப்படை தெரிவித்துள்ளது.
 
தொலைதூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாகவும், நமது நாட்டின் கடல் சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வந்தால் அதை முறியடிக்க கடற்படை முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு  கடல் எல்லைகளிலும் போர்க்கப்பல்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா - பாகிஸ்தான் போர் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

இன்றுடன் கெடு முடிவு.. பாகிஸ்தானியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கை..!

88 % இந்தியர்களிடம் கார் வாங்கும் அளவு வசதியில்லை! - சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா!

இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments