Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த இந்திய அதிகாரிகள்!

Advertiesment
இந்தியா
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (21:25 IST)
இந்திய அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை இன்று  சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணையை காண வந்திருந்த பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கைகுலுக்க மறுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 நெதர்லாந்து நாட்டின் ஹாக்யூ நகரில் குல்பூஷண் ஜாதவ் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணை நேரில் பார்க்க  இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் உள்பட பலரும் வருகை தந்தனர். இந்த நிலையில் விசாரணையை காண வந்த அனைவருக்கும் பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல் கைகுலுக்கி வந்தபோது இந்திய அதிகாரிகள் மட்டும் அவருக்கு கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல், அதன் பின் அடுத்த அதிகாரியிடம் கைகுலுக்க சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது. புலுவாமா தாக்குதலுக்கு பின்னர் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையே இந்தியர்கள் வெறுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அமைதிக்கான நோபல் பரிசு! அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் சிபாரிசு...