Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்! – உக்ரைன் செல்லும் விமானப்படை விமானம்?

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:03 IST)
உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க விமானப்படையின் சி17 விமானம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மக்கள் அண்டை நாடுகள் வழியாக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் விமானம் வழியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் போர் உக்கிரமடையும் சூழல் உள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையில் பெரிய விமானமான போயிங் சி17 ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு உதவும் நல் எண்ணத்தின் பேரில் மருந்துகள், உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments