இந்தியன் வங்கி மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கள் பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டைப் பயன்படுத்த போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கபப்ட்டது.
அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில் இப்போது இந்தியன் வங்கி தங்கள் ஏடிஎம்களில் இனி 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளதாக் செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.