Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் இந்திய விமானத்திற்கு போர் எச்சரிக்கை: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (11:34 IST)
345 பேருடன் லண்டன் நகரை நோக்கி புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானம், தவறுதலாக ஜெர்மனி நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தது.


 
 
ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தை ஓட்டிவந்த விமானி தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் தொலைத்தொடர்பு கருவியை சரியான அலைவரிசையில் வைக்காமல், சற்றே மாற்றி வைத்துள்ளதை கவனிக்காமல் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.
 
எந்த விதமான அறிவிப்புமின்றி தொலைத்தொடர்பு இணைப்பு பெறாமலும் சுமார் அரை மணி நேரமாக அந்த விமானம் சர்வ சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தது.
 
சர்வதேச வான் எல்லை விதிமுறைகளை மதிக்காமல் பறக்கும் அந்த பயணிகள் விமானத்தை எச்சரிப்பதற்காக நடு வானில் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல்மிக்க போர் விமானம் மின்னல் வேகத்தில் பின்தொடர்ந்தது.
 
போர் விமானத்தின் எச்சரிக்கையை பார்த்து எச்சரிக்கை அடைந்த ஜெட் ஏர்வேஸ் விமானி, உடனடியாக தொலைத்தொடர்பு கருவியை கவனித்து அதை சரிசெய்தார்.
 
கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக அந்த ஜெட் ஏர்வேஸ் விமானி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments