Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் மாயமாய் மறைந்த இந்திய விமானம் - அதிர்ச்சியில் இராணுவம்

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (17:12 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் அசாமிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாயமாகியுள்ளது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான அண்டனோவ் ஏ.எந்32 ரக போக்குவரத்து விமானம் அசாமின் ஜோர்கத் விமான தளத்திலிருந்து இன்று மதியம் 12.25க்கு புறப்பட்டுள்ளது. அதில் விமானி உட்பட மொத்தம் 13 பேர் பயணித்திருக்கிறார்கள். 1 மணியளவில் அருணாச்சலபிரதேசத்தின் மலைப்பகுதிகளில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ராடார் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டர் பதிவில் “காணாமல் போன விமானம் குறித்து விமானப்படை துணை தலைவர் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். விமானத்தில் பயணித்த அனைவரும் நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

தீபாவளி நாளிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

விஜய்யின் மாநாடு பெரிய வெற்றி.. அவருக்கு வாழ்த்துகள்! - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments