ஹெலினா, துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே ஹெலினா, துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த 2 அதிநவீன ஏவுகணைகள் எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.