இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. ரூ.110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 எனவும் விற்பனையாகிறது.
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கும் சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவு போன்ற பொருட்களுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலங்கையில் தினமும் 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.