Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

Advertiesment
இந்தியா

Siva

, வெள்ளி, 9 மே 2025 (08:30 IST)
பாகிஸ்தான், இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த 50 ட்ரான்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இந்த முயற்சியில் ஒரு ட்ரானும், ஏவுகணையும் இந்தியாவை பாதிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவின் "சுதர்சன சக்கரம்" என அழைக்கப்படும் பாதுகாப்பு முறை, இந்த ட்ரான்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதன் மூலம், பாகிஸ்தான் தனது ஆயுத கையிருப்பு மற்றும் வான்படை திறனில் எவ்வளவு பின்னடைவை சந்திக்கிறது என்பதும், இந்தியா பாதுகாப்பு துறையில் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்பதும் வெளிச்சமாய் தெரிய வந்துள்ளது.
 
இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கிய "எஸ்-400" என்ற உயர் தொழில்நுட்ப ஆயுதமே தற்போது "சுதர்சன சக்கரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆயுதத்தை வாங்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், மோடி அரசு அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அதை பெற்றது. அந்த ஆயுதமே இப்போது இந்தியாவை பாதுகாத்து வருகிறது.
 
இது விஷ்ணுவின் ஆயுதமாகக் கருதப்படும் சக்கரத்தை போன்று, இந்தியாவின் பாதுகாப்புக்கு அரிதான காவலனாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!