Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

Advertiesment
Satellite

Mahendran

, திங்கள், 12 மே 2025 (10:15 IST)
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை கண்காணிக்க ரூ.22500 கோடி செலவில் உளவு செயற்கைக்கோள் அமைக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்திய அரசு தனது உளவுத்துறையை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும், அதன்படி உளவு செயற்கைக்கோள் அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் ஆயுதப்படைகள், உளவுத்துறை இயந்திரங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதற்காக ரூ.22500 செலவில் உளவு செயற்கைக்கோள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில் 52 உளவு செயற்கை கோள்கள் தயாரிக்கப்படும் என்றும், இதில் 32 செயற்கை கோள்கள் செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
மீதமுள்ளையே 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரிக்கும். இந்த செயற்கைக்கோள்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதங்களை கண்காணிக்க பயன்படும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!