Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆயிரத்தை நெருங்கும் ஒமிக்ரான் பாதிப்புகள்! - இந்தியாவில் சமூக பரவல்?

Advertiesment
ஆயிரத்தை நெருங்கும் ஒமிக்ரான் பாதிப்புகள்! - இந்தியாவில் சமூக பரவல்?
, வியாழன், 30 டிசம்பர் 2021 (09:47 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 961 ஆக பதிவாகியுள்ளன. இதில் 320 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான ஒமிக்ரான் பாதிப்பில் 263 பாதிப்புகளுடன் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 252 பாதிப்புகளும், குஜராத்தில் 97 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 45 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா! மீண்டும் எகிறும் பாதிப்புகள்!