Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சலம், மத்திய பிரதேசத்தில் முதல் பாதிப்பு! – 450 ஐ கடந்த ஒமிக்ரான்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (08:35 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில் முதல்முறையாக இமாச்சலம் மற்றும் மத்திய பிரதேசத்தில் முதல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 450 ஐ தாண்டியுள்ளது. முதன்முறையாக மத்திய பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. 8 பேரில் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 2 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments